ராஜபக்சே மீண்டும் தோல்வியை தழுவுவார்: அதிபர் சிறிசேனா ஆருடம்!

சிறிசேனாநாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்சே தொடர்ந்து தோல்வியைத் தழுவுவார் என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள எடுத்தத் தீர்மானம் சரியானதே. ராஜபக்சே அதிபராக பதவி ஏற்றிருந்தால் 100 நாள் திட்டத்திற்கு ஆதரவு அளித்திருக்கமாட்டார். கடந்த இரண்டு வாரங்களில் எனக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்று வேறு எந்த அதிபருக்கும் தாக்குதல் நடத்தப்படவில்லை.

காட்டிக் கொடுத்தவன் என அடையாளப்படுத்தப்பட்டேன். கெட்டவன், காட்டிக் கொடுத்தான் என குற்றம் சுமத்தப்பட்டது. இவ்வாறு என்னை குற்றம் சுமத்தி செய்தி வெளியிட ஊடகங்களுக்கு சுதந்திரம் காணப்பட்டது. என்னைத் துரோகி என அடையாளப்படுத்துவோர் நாட்டின் ஜனநாயக நிலைமைகளை நடைமுறைச்சாத்திய ரீதியாக ஆராயுமாறு கோருகின்றேன்.

ராஜபக்சே தொடர்ந்தும் தேர்தல்களில் தோல்வியடைவார். இந்தப் பிழையை ராஜபக்சே செய்யவில்லை. ஜே.ஆர்.ஜயவர்தன உருவாக்கிய முறைமை பிழையானது. யாரையும் பிழை சொல்ல வேண்டாம். இந்த முறைமையிலேயே தவறு காணப்படுகின்றது. சுதந்திரக் கட்சியை சின்னாபின்னமாக்கும் எண்ணம் எனக்குக் கிடையாது. ராஜபக்சேவிற்கு வேட்பு மனு வழங்கப்பட்டதற்கு எழுத்து மூலம் எனது எதிர்ப்பை வெளியிட்டேன்” என்று கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top