காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் விட வேண்டும்: விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை

10255616_1539472956333284_6688870928173328487_n

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் விட வேண்டும் என்று விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்:

காவிரி டெல்டாவில் கடந்த 4 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை. ஒருபோக சம்பா சாகுபடியிலும் தண்ணீர் பற்றாக்குறையால் மகசூல் இழப்பு ஏற்பட்டது.

நடப்பாண்டு மே மாதத்தில் பெய்த கோடை மழையால் கர் நாடகத்தில் உள்ள அணைகள் முழுமையாக நிரம்பின. கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் தென் மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. எனவே, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புப்படி குறுவை சாகுபடிக்கு தண்ணீரை கேட்டுப்பெற வேண்டுமென்று தமிழக அரசை தொடர்ந்து வலி யுறுத்தினோம். ஆனால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய அரசையும் வலியுறுத்தா மல், தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், தென் மேற்குப் பருவமழைக் காலம் முடிவடையும் தருவாயை எட்டி விட்டது. கர்நாடகத்தைப் பொருத் தவரை, அதிக மழை பெய்யும் போது உபரி நீரை மட்டுமே தமிழகத்துக்கு வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அங்கு மழை நின்றவுடன் அணை களை மூடிவிடுகின்றனர்.

தற்போது, மேட்டூர் அணையில் 85 அடிக்கும் குறைவாகவே தண் ணீர் உள்ளது. வெயிலின் தாக்க மும் அதிகரித்து வருகிறது. எனவே, ஒருபோக சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் கிடைக்குமா என்று விவசாயிகள் கவலைக்குள்ளாகி யுள்ளனர்.

தமிழக முதல்வர் இனியும் காலம் தாழ்த்தாமல் மத்திய அரசை அணுகி, கர்நாடகத்திடமிருந்து சம்பா சாகுபடிக்கு உரிய நீரை கேட்டுப்பெற வேண்டும். தேவை யானால் உச்ச நீதிமன்றத்தை அணுகவேண்டும்.

மேலும், மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கும் தேதியையும் முன்கூட்டியே அறிவிக்க வேண் டும். வேளாண்மைத் துறை மூலம் நடப்பாண்டுக்கான சம்பா சாகுபடி முறைகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும். சம்பா சாகுபடிக்கும் சிறப்பு தொகுப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top