ஐ.பி.எல். போட்டிகளுக்கு தடை விதிக்ககோரிய மனு தள்ளுபடி

613f9d85-cdf9-4e04-8b9f-371f6d545ec3_S_secvpfஐ.பி.எல்.போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் போட்டிகளில் ஏற்பட்ட முறைகேடுகள் களையப்படும் வரை அந்த அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.ரோகினி மற்றும் ஜெயந்த் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்ததது.

அப்போது ஐ.பி.எல். போட்டிகளைக் கண்காணிக்க சுதந்திரமான குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இவ்விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தலையிடுவது அவசியமில்லாதது என்றனர். எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top