இலங்கை பாராளுமன்ற தேர்தல்: குருனேகலா தொகுதியில் ராஜபக்சே போட்டி

8df45b59-0cce-452e-b90f-cf0b7bfeb1f8_S_secvpfஇலங்கை பாராளுமன்ற தேர்தல் வருகிற ஆகஸ்டு மாதம் நடைபெறுகிறது. அதில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணியில் இடம் பெற்றுள்ள இலங்கை சுதந்திரா கட்சி சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அவர் குருனேகலா தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்கான அறிவிப்பை ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய சுதந்திரா முன்னணியின் தலைவர் விமல் வீரவன்கா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடந்த நிருபர்கள் கூட்டத்தில் இதை அறிவித்தார். கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வடமேற்கு மாகாணத்தில் உள்ள குருனேகலா தொகுதியில் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை விட ராஜபக்சே கூடுதல் வாக்கு பெற்றார்.

அங்கு அவர் 53.46 சதவீதம் அதாவது 10 லட்சம் ஓட்டுகள் பெற்றார். எனவே, அவர் இந்த தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிகிறது. எனவே, அவர் வருகிற 13–ந் தேதி மனுதாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தாலும், ராஜபக்சே தேர்தலில் போட்டியிடும் தகவலை கேபினட் செய்தி தொடர்பாளர் ரஜிதா சேனரட்னே மறுத்துள்ளார். வேட்பாளர் தேர்வு பட்டியலில் ராஜபக்சே பெயர் முடிவு செய்யப்படவில்லை. இன்னும் அவரது பெயர் இறுதி செய்யப்படவில்லை. இன்று அது குறித்து தெரியவரும் என கூறியுள்ளார்.

இவர் ராஜபக்சே அரசில் மந்திரியாக இருந்தார். கடந்த நவம்பர் மாதம் பதவியை ராஜினாமா செய்து விட்டு மைத்ரிபால சிறிசேனாவுடன் இணைந்து அதிபர் தேர்தலில் பணியாற்றினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top