மரணத் தண்டனை கைதிகளின் வழக்குகளை விசாரிக்க முன்னுரிமை: தலைமை நீதிபதி எச்எல்.தத்து

பேரறிவாளன்முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோரது விடுதலையை எதிர்க்கும் மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை, எச்எல் தத்து தலைமயிலான அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

தனியார் நிறுவன வழக்குகள் 2 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதாகவும், அவற்றை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான முன்னாள் அமைச்சர் கபில்சிபல் வாதிட்டார்.

நிறுவனங்களைத் தாண்டி, பலரது வாழ்வு தொடர்புடைய வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி தத்து, இந்த நிலையில், மரண தண்டனை வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் முன்னுரிமை வழங்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

ராஜிவ்காந்தி வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரது விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனு, வரும் 15ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

அரசியல் சாசன அமர்வில் யார் யார் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்படாத நிலையில், தலைமை நீதிபதி எச்எல் தத்து தலைமை வகிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top