போரூர் ஏரியை பாதுகாக்கக் கோரி பத்திரிக்கையாளர் சந்திப்பு!

11724634_1044225072289371_1450686989_o

போரூர் ஏரியை காக்கக்கோரிக்கை வைத்தும், அரசு போரூர் ஏரியை மீட்டெடுத்து வளப்படுத்த வேண்டுமென்றும், தமிழகமெங்கும் மூடப்படும் ஏரிகளை காப்பது தமிழக அரசின் கடமை என்பதை வலுயுறுத்தியும், தமிழகத்தில் இருக்கும் நீர்நிலைகளின் அவல நிலை குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று காலை சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நிகழ்ந்தது.

பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம், திராவிடர் விடுதலைக்கழகம், தந்தைப்பெரியார் திராவிடர் கழகம், பூவுலகின் நண்பர்கள், தமிழர் விடுதலைக்கழகம், மற்றும் பங்கேற்க இயலாத நிலையில் ஆதரவு தெரிவித்த அமைப்புகளாக தமிழ்த்தேசிய பேரியக்கம், தமிழர் எழுச்சி இயக்கம் ஆகிய அமைப்புகள் கலந்து கொண்டன மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தது. 

ஞாயிற்றுக்கிழமை இதற்கான ஆலோசனைக்கூட்டத்தினை ஒருங்கிணைத்திருக்கிறோம். ஆர்வமுள்ள அனைத்து தோழர்களையும் அழைக்கிறோம். தி.நகர் வெங்கட் நாராயணா சாலை, திருப்பதி தேவஸ்தானம்   செ.தெ.நாயகம் பள்ளியில் மாலை 5 மணிக்கு நடைபெறுவதாக அறிவித்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top