நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்சே போட்டி: வேட்பு மனுவில் கையொப்பம்!

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் ராஜபக்சே கையொப்பம் இட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

ராஜபக்சே

கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை அவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் குருணாகல் மாவட்டத்தில் ராஜபக்சே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகமான ஆதரவு வாக்குகளைப் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்துக்கு சென்று பிரதமர் பதவியை வழங்குமாறு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் குருணாகல் மாவட்டத்தில் ராஜபக்சே போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு ராஜபக்சேவுக்கு வாய்ப்பளிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து சிவில் சமூகத்தின் தேர்தல் கண்காணிப்புக்குழுவினர் நேற்றிரவு அதிபர் மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து வலியுறுத்தினர்.

வேட்பாளர்களை தேர்வு செய்யும் அதிகாரம் தன்னிடம் இல்லை என்று சிறிசேன கூறியதாக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்

ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் போடிட்டியிட யார் யாருக்கு வாய்ப்பளிப்பது என்பது தமது கட்டுப்பாட்டில் இல்லை என்று அதிபர் சிறிசேன தெரிவித்ததாக அந்த சிவில் சமூக தேர்தல் கண்காணிப்புக்குழுவைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுஷில் பிரேமஜெயந்த மற்றும் பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிர்வாகக்குழுவே அந்த முடிவுகளை எடுப்பதாக சிறிசேன தெரிவித்ததாகவும், அந்த குழுவின் சார்பில் சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top