விஜயகாந்த், சு.சாமி, நக்கீரன் கோபால் மீதான அவதூறு வழக்குகள்: உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு!

சுப்பிரமணியன் சாமிவிஜயகாந்த்,சுப்பிரமணியன் சுவாமி, நக்கீரன் கோபால் ஆகியோர் மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்குகளின் விசாரணை வரும 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், பேசியதாக விஜயகாந்த் மீது 12 வழக்குகளும், சுப்பிரமணியன் சுவாமி மீது 5 வழக்குகளும் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நக்கீரன் பத்திரிகை மீதும் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவற்றிற்கு எதிராக அந்த மூவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். குற்ற அவதூறு வழக்குகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்பதால் அவற்றை தள்ளுபடி செய்யவேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் போது, அவகாசம் கேட்ட வழக்கறிஞர்களைக் கண்டித்த நீதிபதிகள், வழக்கு விசாரணை பிற்பகலில் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். அதன்படி இன்று பிற்பகல் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர்கள் கேள்வி எழுப்புவதாலும்,அவதூறு வழக்கு தொடர்பாக சட்டபிரிவுகளை ஆராய்வதற்காகவும், இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதனிடையே உச்ச நீதிமன்ற சட்டநிபுணர் , அவதூறு வழக்கு சட்டப்பிரிவில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.. இதனைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அவதூறு சட்டப்பிரிவை நீக்க வேண்டியதன் அவசியம், மனுதாரரின் கோரிக்கை உள்ளிட்டவை குறித்து பதில் மனு தாக்கல் செய்யும் படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top