மத்திய பிரதேச முதல்வர் பதவியை சிவராஜ் சிங் சவுகான் ராஜினாமா செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்!

காங்கிரஸ் மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்வு வாரிய முறைகேட்டிற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியை சிவராஜ் சிங் சவுகான் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாகவும், முறைகேடு வழக்கை திறன் வாய்ந்த அமைப்புகள் நடுநிலையுடன் விசாரிக்க வேண்டும் என்று கூறியும், அலகாபாத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

தேர்வு வாரிய முறைகேட்டை மாநில பாரதிய ஜனதா அரசும், மத்திய அரசும் சீர்குலைக்க முயல்வதாகவும் அப்போது அவர்கள் குற்றம்சாட்டினர்.

மத்தியப் பிரதேச தொழில் கல்வி, அரசுப் பணி தேர்வு வாரிய முறைகேட்டில் தொடர்புடையதாக கூறப்பட்டவர்கள், சாட்சிகள் என இதுவரை 46 பேர் உயிரிழந்தனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் உள்பட 5 பேர் அடுத்தடுத்து சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மரணமடைந்தனர்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top