செல்போன் மூலம் கல்லூரி மாணவிக்கு போலீசார் பாலியல் தொந்தரவு

wwwwwwwwwwwwwwவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேருந்து நிலையத்தில், கிராம பேருந்துக்காக கல்லூரி மாணவி ஒருவர் காத்திருந்தார். ரோந்து பணிக்காக அங்கு வந்த செஞ்சி குற்றபிரிவு தலைமைக்காவலர் ரமேஷ், தனியாக இருந்த மாணவியை ‘யார்… என்ன?’ என்று விசாரித்துவிட்டு, மாணவி கையில் வைத்திருந்த செல்போனை மிரட்டி பிடுங்கியுள்ளார்.

அதில் ‘ரமேஷ் போலீஸ்’ என்று தன்னுடைய எண்ணை ‘சேவ்’ செய்ததோடு, மாணவியின் எண்ணையும் அவரது போனில் பதிவு செய்து கொண்டாராம். பின்னர் அவரை வீட்டில் இறக்கிவிடுவதாக கூறி இரு சக்கர வாகனத்தில் வருமாறு மாணவியை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ந்து போன மாணவி, அருகில் இருந்த கடையில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்நிலையில் அன்று இரவு முழுக்க அந்த மாணவியில் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தலைமை காவலர் ரமேஷ் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால் எரிச்சலைடந்த மாணவி, விஷயத்தை நண்பர்கள் சிலரிடம் கூற, அவர்கள் இந்த தகவலை வாட்ஸ்-அப்பில் உலாவ விட்டுள்ளனர். சிலர் இந்த தகவலை விழுப்புரம் எஸ்.பியின் வாட்ஸ்-அப் புகார் எண்ணுக்கும் அனுப்பினார்கள்.

இதையடுத்து அதிகாரிகள் ரமேஷின் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தபோது, மாணவியின் செல்போனுக்கு ரமேஷ் பத்துக்கும் மேற்பட்ட முறை தொடர்பு கொண்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தலைமைக்காவலர் ரமேஷை எஸ்.பி நேரில் அழைத்து விசாரித்துள்ளார். மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ரமேஷ் விரைவில் இடைநீக்கம் செய்யப்படுவார் என்கிறது போலீஸ் வட்டாரம்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top