உலக ஆக்கி லீக்: ஆஸ்திரேலிய அணி சாம்பியன்

922b6231-b52e-447f-9321-b1b452b8938f_S_secvpfஉலக ஆக்கி லீக் அரை இறுதி சுற்று போட்டிகள் பெல்ஜியத்தில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடைசி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஆஸ்திரேலிய அணி வீரர் கிறிஸ் சிரிலோ வெற்றிக்கான கோலை அடித்தார்.

முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 1-5 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் அதிர்ச்சி தோல்வி கண்டு 4-வது இடம் பெற்றது. பெண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை சாய்த்து சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்தையும், நியூசிலாந்து அணி 4-வது இடத்தையும் பெற்றன. இந்திய அணி 5-வது இடம் பிடித்து அடுத்த (2016) ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top