நடிகர் சங்கத்திற்காக அஜீத் செய்த மிகப் பெரிய உதவி – இதுவரை வெளியில் தெரியாத உண்மை!

Actor Ajith Kumarநடிகர் சங்க தேர்தல் இந்த மாதம் 15ம் தேதி நடக்கவுள்ளது. இதில் மூன்று முறை தலைவராக இருந்த சரத்குமார் மீண்டும் தலைவர் போட்டிக்கு போட்டியிடுகிறார். நடிகர் சங்க தேர்தல் பற்றியும், இத்தனை வருட நடிகர் சங்க செயல்பாடு பற்றியும் ஒரு தனியார் தொலைகாட்சியில் பேட்டி அளித்தார் சரத்குமார்.

அப்போது அவரை கேள்வி கேட்டு கொண்டிருந்த தொகுப்பாளர் இந்த மூன்று வருட பணியில் உங்கள் தலைமையில் நடந்த மைல்கல்லான விஷயம் ஏது என்று கேட்டார்.

அதற்கு சரத்குமார் நடிகர் சங்க கடனை அடைத்தது தான், இதற்கு பல பேர் உதவி செய்தனர், நடிகர்கள் விஜயகாந்த் 35 லட்சம், அஜித் 7 1/2 லட்சமும், பிரசாந்த் 5 லட்சமும், நான் 5 லட்சமும் கொடுதேன் என்று தெரிவித்தார்.

இதை இப்பொழுது சொல்வதற்கு காரணம் அஜித் மீது எப்போதுமே ஒரு குற்றசாட்டு உண்டு, அவர் எப்போதுமே நடிகர் சங்கத்துக்கு ஒத்தழைப்பு கொடுக்க மாட்டார் என்று, இதுநாள் வரை வெளிவராத இந்த விஷயம் சரத்குமார் முலமாகவே தெரியவந்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top