அமெரிக்க தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

students hunger strikeஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை மற்றும் ஈழத்திற்கான போது வாக்கெடுப்பு ஆகிய தீர்மானங்களை இந்தியா நிறைவேற்ற வலியுறுத்தி, தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக நேற்று கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள செங்கொடி அரங்கத்தில் சென்னை ஏ.எம்.ஜெயின் கல்லூரி மாணவர்கள் கார்த்திக், அருண்குமார், அண்ணாமலை பல்கலை பொறியியல் மாணவர் ஜெயப்ரகாஷ், சிவராஜ், சென்னை சட்டப் பல்கலை மாணவர் யுவராஜ் ஆகியோர் உண்ணாவிரதத்தில் அமர்ந்தனர்.

ஆனால் அவர்களை அந்த இடத்தில் போராட்டத்தை தொடர போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் இன்று காலை தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தங்களது போராட்டத்தினைத் தொடர்ந்துள்ளனர்.

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை மாநாட்டின் போது, இந்தியா அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல், இலங்கையில் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை மற்றும் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு ஆகியவற்றை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்தனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top