36 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி!

olympicsஉலக ஹாக்கி லீக் தொடரில் ஐந்தாவது இடத்துக்கான போட்டியில் இந்திய மகளிர் அணி, ஜப்பான் அணியை வீழ்த்தியது. இதையடுத்து பிரேசிலில் அடுத்தாண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது.

பெல்ஜியத்தன் ஆண்ட்வெர்ப் நகரில் நடைபெற்ற ஆட்டத்தின் பதிமூன்றாவது நிமிடத்தில் இந்திய அணி முதல் கோல் அடித்தது. ஜப்பான் அணியின் தடுப்பை தகர்த்து வந்தனா கத்தாரியா கடத்திக்கொடுத்த பந்தை, ராணி வேகமாக செயல்பட்டு கோலாக்கினார்.

இதன் பின்னர், ஜப்பான் அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. அந்த அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளை இந்திய வீராங்கனைகள் முறியடித்தனர்.

விறுவிறுப்பு நிறைந்த போட்டியின் முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 36 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இந்திய அணி பெற்றது. கடைசியாக 1980-ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் அணி விளையாடியது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top