கோகுல்ராஜ் படுகொலையை கண்டித்து மே 17 இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோகுல்ராஜின் படுகொலைக்கு நீதி கேட்டும், சாதிவெறி கொலைகளைக் கண்டித்தும் சென்னை சேப்பாக்கத்தில் மே 17 இயக்கம் சார்பில் தற்போது கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

11709511_1127631157254342_7824248033576715174_n

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கோகுல்ராஜ் என்ற ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவனும், அதே பகுதியை சேர்ந்த சுவாதி என்ற பிற்படுத்தப்பட்ட பெண்ணும் காதலித்து வந்திருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த 26.06.2015 அன்று காதலர்கள் இருவரும் திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவிலுக்கு சென்றிருந்த போது பெண்ணின் சாதியை சேர்ந்த யுவராஜ் என்பவர் தலைமையிலான சாதிவெறி கும்பல் கோகுல்ராஜை கடத்திக் கொண்டுபோய் துன்புறுத்தி படுகொலை செய்திருக்கிறார்கள்.

11667265_1127631180587673_5140160565214097064_n

இப்படியாக தொடர்ந்து சாதிவெறி கும்பல்கள் சாதி மறுப்பு திருமணமோ அல்லது காதல் செய்பவர்களையோ கொலை செய்து வருகிறது.அரசுகளும் தங்களின் கள்ள மவுனத்தாலும், அலட்சியத்தாலும் இதனை ஆதரிக்கிறதோ என்ற சந்தேகமும் நமக்கு வருகிறது.

11659416_1127631060587685_2044400982894017798_n

இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க மிகக்கடுமையான நடவடிக்கையை சாதிவெறிகும்பல்களின் மீது எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சேப்பாக்கத்தில்  மே  பதினேழு  இயக்கம் சார்பாக கண்டன ஆர்ப்பட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழர் விடியல் கட்சி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி, பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top