மார்ச் 06 – வரலாற்றில் இன்று!

Perarignar-Anna_spl1790 – மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1945 – ருமேனியாவில் கம்யூனிச அரசு பதவிக்கு வந்தது.

1946 – வியட்நாம் போர்: ஹோ சி மின் பிரான்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி பிரான்ஸ் வியட்நாமை பிரெஞ்சு ஒன்றியம் மற்றும் இந்தோசீனக் கூட்டமைப்பினுள் தன்னாட்சி அதிகாரம் கொண்ட பகுதியாக ஏற்றுக் கொண்டது.

1953 – ஸ்டாலினின் மறைவையடுத்து சோவியத்தின் பிரதமராகவும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை செயலாளராகவும் கியோர்கி மாலென்கோவ் பதவியேற்றார்.

1957 – ஐக்கிய இராச்சியக் குடியேற்ற நாடுகளான கோல்ட் கோஸ்ட் மற்றும் பிரித்தானிய டொகோலாந்து ஆகியன இணைந்து கானா குடியரசு என்ற பெயரில் விடுதலை பெற்றன.

1964 – காசியஸ் கிளே தனது பெயரை அதிகார பூர்வமாக முகமது அலி என மாற்றிக் கொண்டார்.

1967 – திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.

1975 – ஈரானும் ஈராக்கும் தமது எல்லை தொடர்பாக உடன்பாட்டிற்கு வந்தன.

1987 – பிரித்தானியாவின் எம்எஸ் ஹெரால்ட் என்ற கப்பல் கவிழ்ந்ததில் 193 பேர் கொல்லப்பட்டனர்.

2007 – இந்தோனீசியாவின் சுமாத்ராவில் இடம்பெற்ற இரண்டு அடுத்தடுத்த நிலநடுக்கங்களில் 70 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top