லஞ்சம் வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பட்டியலை வெளியிட்ட லலித் மோடி – கிரிக்கெட் உலகில் பரபரப்பு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ரவீந்தர ஜடேஜா, ட்வைன் பிரவோ ஆகியோர் சூதாட்டக்காரர்களிடம் இருந்து 20 கோடி ரூபாய் அளவிற்கு லஞ்சம் வாங்கியதாக லலித் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

1435467539_F_newstig21419

இது தொடர்பாக கடந்த 2013ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சனுக்கு எழுதிய கடிதத்தை ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில் , எனக்கு கிடைத்த தகவலை தங்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன். இந்திய சூதாட்டத் தரகர் பாபா திவானிடம் இருந்து தலா 20 கோடி ரூபாய் அளவிற்கு பணம் அல்லது அதற்கு இணையான அடுக்குமாடி குடியிருப்புகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த சுரேஷ் ரெய்னா, ரவீந்தர ஜடேஜா, ட்வைன் பிராவோ ஆகியோர் லஞ்சமாக பெற்றுள்ளனர்.

fullscreen-capture-27-06-2015-221054.bmp-1435423478-800

பாபா திவான் ஒரு ரியல் எஸ்டேட் அதிபரும் கூட. இந்த பாபா, ஐ.பி.எல். சூதாட்டக் குற்றச்சாட்டுக்குள்ளான குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு நெருக்கமானவர். பணம் அல்லது அதற்கு இணையான அடுக்குமாடி குடியிருப்புகளை இந்த 3 வீரர்களும் லஞ்சமாக பெற்றுள்ளனர் என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து எனக்கு தகவல் கிடைத்துள்ளது.

Capture

சுரேஷ் ரெய்னாவுக்கு டெல்லி ,கிர்கான் மற்றும் வசந்தவிகார் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ரவீந்தர ஜடேஜாவுக்கு மும்பை பாந்திரா கடற்கரை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அபார்ட்மென்ட் வழங்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய வீரர் ட்வைன் பிராவோவுக்கு பணமாகவே லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இது உண்மையாக இருக்க கூடாது என்று தாம் விரும்புவதாகவும் லலித் மோடி அந்த கடிதத்தில் கூறியுள்ளார். லஞ்சம் பெற்றது உண்மையாக இருக்கும்பட்சத்தில் பாபா திவான் மட்டுமன்றி இன்னும் பலருக்கு இந்த சூதாட்டத்தில் தொடர்பு இருக்கலாம். ஐ.பி.எல். போட்டியை பொறுத்த வரை ஒரு போட்டிக்கு 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை சூதாட்டத்தில் புழங்குவதாகவும் லலித் மோடி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

One comment

  1. Liyakathali Farhan

    கண்டிக்க வேண்டிய. விடயம்

Your email address will not be published.

Scroll To Top