ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் விதிகளை மாற்றியது ஐசிசி

India v Bangladesh: Quarter Final - 2015 ICC Cricket World Cupஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் விதிகளை ஐசிசி அமைப்பு மாற்றி அமைத்துள்ளது.

புதிய விதிகளின் படி ஒருநாள் போட்டிகளின் போது முதல் 10 ஓவர்களில் வழங்கப்பட்ட பேட்டிங் பவர் பிளே ரத்து செய்யப்படுகிறது. கடைசி 10 ஓவர்களில் 5 பீல்டர்கள் வெளிவட்டத்தில் நிறுத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளின் போது வீசப்படும் அனைத்து ‘நோ ‘பால்களுக்கும் ப்ரீ ஹிட் வழங்கப்படும் என்றும் ஐசிசி-யின் புதிய விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறைகள் வருகிற ஜூலை மாதம் 5-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன. பார்படாசில் நடைபெற்ற ஐசிசி உயர்மட்ட கூட்டத்தில் புதிய விதிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கடந்த மே மாதம் மும்பையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய விதிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top