ஆர்கே நகரில் டிராபிக் ராமசாமிக்கும், அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம்

traffic ramasamy  ththஇடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஆர்கே நகரில் வாக்குப்பதிவு மையத்திற்கு வந்த வேட்பாளர் டிராபிக் ராமசாமிக்கும், அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தண்டையார்பேட்டை சேனி அம்மன் கோவில் தெருவின் அருகில் உள்ள வாக்குச்சாவடிக்கு இன்று காலை டிராபிக் ராமசாமி வந்தார். அப்போது, வாக்குச்சாவடி அருகே அதிக அளவில் அதிமுகவினர் இருப்பதாகவும், தன்னை தாக்க வந்ததாகவும் அவர் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்தார்.

இந்நிலையில், அங்கு வந்த 42 ஆவது வார்டு கவுன்சிலர் அஞ்சுலட்சுமி, தேவையில்லாமல், விளம்பரத்திற்காக டிராபிக் ராமசாமி செயல்படுகிறார் என்று கூறி, அவர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று வாக்குவாதம் செய்தார். அவர் அங்கிருந்து வெளியேற கோரி அதிமுக தொண்டர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top