தொடர்ந்து 3 படங்களை தயாரித்து நடிக்கிறார் விஜய் ஆண்டனி!

Vijay Antonyதமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். இவர் இசையமைத்த ‘நாக்குமுக்க’ பாடல் இந்தியா முழுக்க பிரபலம். இதுதவிர பல வெற்றிப் பாடல்களையும் தமிழ் சினிமாவுக்குத் தந்த இவர் திடீரென மற்ற படங்களுக்கு இசையமைப்பதை குறைத்துக் கொண்டு நடிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டார்.

இந்நிலையில், கடந்த 2012-ஆம் ஆண்டு ‘நான்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் விஜய் ஆண்டனி. அந்த படம் அவருக்கு மிகப் பெரிய வெற்றியை பெற்றுத் தரவில்லை என்றாலும், நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது. அதன் விளைவு, அதன்பிறகு நடிப்பு மீது அவருக்கான ஆர்வம் இன்னும் அதிகமானது.

அதனால், படங்களுக்கு இசையமைப்பதை குறைத்துக் கொண்டு நடிப்புக்கு கூடுதல் நேரத்தை செலவழித்து வருகிறார் அவர். தற்போது ‘சலீம்’ என்ற படத்தில் நடித்து வரும் விஜய் ஆண்டனி. அடுத்தடுத்து ‘திருடன்’, ‘சைத்தான்’, ‘இந்தியா பாகிஸ்தான் பார்டர்’ என மூன்று படங்களில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த 3 படங்களையும் அவர் சொந்த நிறுவனமே தயாரிக்கப்போகிறது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தனக்கு ஹீரோவாக நல்ல அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறாராம் விஜய் ஆண்டனி.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top