மருத்துவ படிப்பிற்கான முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு: அனைத்து இடங்களும் நிரம்பின

a5e6d372-c834-4386-bc09-50e749b639e7_S_secvpfதமிழ்நாட்டில் மொத்த 20 அரசு மருத்துவ கல்லூரிகளும், ஒரு பல் மருத்துவ கல்லூரியும் உள்ளது. இந்த கல்லூரியில் மொத்தம் உள்ள 2655 இடங்களில் 15 சதவீதம் (398 இடங்கள்) அகில இந்திய அளவில் ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 2257 மருத்துவ படிப்பு இடங்களுக்கான கவுன்சிலிங் சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிட அரங்கில் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் கீதாலட்சுமி கவுன்சிலங்கை தொடங்கி வைத்தார்.

முதல் நாள் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெற்றது. இவர்களுக்கான மொத்தம் உள்ள 76 எம்.பி.பி.எஸ் இடங்கள், ஒரு பி.டி.எஸ். இடங்களை நிரப்ப 88 மாணவ–மாணவிகளுக்கு இன்று அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. இதில் மாற்றுதிறனாளிகளுக்கு 68 இடம் ஒதுக்கப்பட்டது. ராணுவ பிரிவில் 5 பேருக்கும், விளையாட்டு பிரிவில் 3 பேருக்கும், பல் மருத்துவ படிப்பில் ஒருவருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டன.

20-ந்தேதி தொடங்கிய பொது கவுன்சிலிங் இன்றுடன் முடிவடைந்தது. இதில் அனைத்து மருத்துவ இடங்களும் நிரப்பப்பட்டன.

இரண்டாவது கட்ட கவுன்சிலிங் ஜூலை 26, 27 ஆகிய தேதிகளும் 3–வது கட்ட கவுன்சிலிங் செப்டம்பர் 6–ந்தேதியும் நடைபெற உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top