சீனாவில் வால்மார்ட் சூப்பர் மார்கெட் மூடல்

walmart chinaசீனாவின் தென்மேற்கில் உள்ள சோங்கிங் நகரில் செயல்பட்டு வந்த தனது கடையை வால்மார்ட் நிறுவனம் மூடியுள்ளது.

சில்லறை வர்த்தகத்தில் சர்வதேச அளவில் முன்னணி வகிக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் நிறுவனம், வருவாய் குறைவு காரணமாக இந்த முடிவை எடுத்ததாக ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவில் உள்ளூர் வர்த்தகர்களால் வால்மார்ட் நிறுவனம் கடும் சவாலை சந்தித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சீனாவில் 10 கடைகளை வால்மார்ட் நிறுவனம் மூடியது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top