இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதி பேச்சுவார்த்தை: ஆர்வம் காட்டும் பிரான்ஸ்

France's Foreign Affairs Minister Laurent Fabius attends a news conference after a bilateral meeting at San Carlos Palace in Bogotaஇஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லாரென்ட் பேபியுஸ் வலியுறுத்தியுள்ளார்.

அரபு நாடுகள், ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் உறுப்பினர்களின் பங்களிப்புடன் இந்த அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்குவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்நிய நாடுகள் பாலஸ்தீனத்தோடு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள தேவையற்ற அழுத்தத்தை இஸ்ரேலுக்கு கொடுப்பதாகவும், இது தவறானது என்றும் அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ தெரிவித்திருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர், இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் பிராந்தியத்தில் அமைதி ஏற்பட வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top