ஐ.ஐ.டி -யில் கல்வி கற்க ஒரே கிராமத்தை சேர்ந்த 18 மாணவர்கள் தேர்வு!

iit-studentsஒரே கிராமத்தை சேர்ந்த 18 மாணவர்கள் தங்களது விடாமுயற்சியால் ஐ.ஐ.டி.யில் உயர்கல்வி கற்க தேர்வு செய்யப்பட்டுள்ள சம்பவம் பீகார் மாநிலத்தில் உள்ள கிராம மக்களை மகிழ்ச்சிப்பெருக்கில் ஆழ்த்தியுள்ளது.

வாழ்வில் முன்னேறத் துடிக்கும் பல இந்திய மாணவர்களின் கனவு ஐ.ஐ.டி. எனப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் உயர்கல்வி கற்பது. அந்த வகையில் இந்த வருடம் சுமார் 26,000 மாணவ, மாணவிகள் ஐ.ஐ.டி.யில் கல்வி கற்பதற்கான நுழைவுத்தேர்வை எழுதினர். அதில் தேர்வு செய்யப்பட்டவர்களில் 18 பேர் பீகார் மாநிலம் கயாவிற்கு அருகே உள்ள பங்கரான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இதில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றி குறித்து 18 மாணவர்களில் ஒருவரான ராகுல் கூறுகையில் “எங்கள் கிராமத்தில் எல்லோரும் சேர்ந்து படிப்பதற்கான சூழல் இருந்தது. இதனால் எல்லோரும் சேர்ந்து படித்து, ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டதால் எதுவும் கடினமாக தெரியவில்லை” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top