‘உத்தமவில்லன்’ படத்தில் கமலுக்கு ஜோடியாகிறார் ‘பூ’ பார்வதி!

parvathi menonதமிழில் ‘பூ’, ‘மரியான்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை பார்வதி கமலின் ‘உத்தமவில்லன்’ படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஸ்வரூபம்-2 படத்தை ரிலீஸ் செய்து விட்டுத்தான் அடுத்த பட வேலைகளில் கமல் இறங்குவார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது அவரது அடுத்த படமான உத்தமவில்லன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுவிட்டது. படத்தை பிரபல கன்னட நடிகரும் கமலின் நண்பருமான ரமேஷ்அரவிந்த் இயக்குகிறார்.

இப்படத்தில் பணிபுரியும் டெக்னீஷியன்களைப் பற்றிய தகவலை சமீபத்தில் வெளியிட்ட படக்குழுவினர், படத்தில் கமலுடன் நடிக்கப் போகும் கதாநாயகி பற்றி எந்த தகவலையும் தெரிவிக்காமல் விட்டுவிட்டனர்.

இந்நிலையில், தற்போது பூ, மரியான் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த பார்வதி கமலுக்கு ஜோடியாக முடிவு செய்யப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் தமிழில் முன்னதாக நடித்த இரண்டு படங்களிலுமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய போதிலும், அவருக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

இதனால் மரியான் படத்திற்கு பிறகு மலையாள சினிமாவில் கவனம் செலுத்தி வந்த அவர் தற்பொழுது கமலுடன் நடிக்கும் வாய்ப்பு என்றதும் புதிய மலையாள படங்களை புறந்தள்ளிவிட்டு உடனடியாக இப்படத்திற்கு ஒப்புக்கொண்டதாக சினிமா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top