அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி – 9 பேர் படுகாயம்!

eb298993-aabd-4967-9506-822d433c8d2b_S_secvpfஅமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் நகரில் கூடைப்பந்து மைதானத்தில் நடைபெற்ற விருந்தின் போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் பலியானார். 9 பேர் படுகாயமடைந்தனர்.

விருந்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவரை குறிவைத்தே இத்தாக்குதல் நடைபெற்றதாகவும், இதில் 26, 30, 45 வயதுள்ள பெண்கள் உள்ளிட்ட பலர் படுகாயமடைய நேரிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுவர்கள் பலர் இவ்விருந்தில் கலந்து கொண்ட போதும் அவர்கள் யாரும் துப்பாக்கி சூட்டில் காயமடையவில்லை என காவல்துறை துணை தலைவர் ஸ்டீவ் டோலண்ட் கூறினார்.

இதில் கொல்லப்பட்டவர் யார் என்ற விவரத்தை போலீசார் இது வரை வெளியிடவில்லை. காயமடைந்தவர்களில் 46 வயது முதியவர் மற்றும் 21 மற்றும் 26 வயதான இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விருந்தில் கலந்துகொண்டவர்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு தர மறுப்பதால், துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணத்தை கண்டுபிடிக்க இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக ஒருவர் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டுள்ளதாக கூறிய டோலண்ட், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top