முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: மூவர் கண்காணிப்பு குழு நாளை கூடுகிறது

Mullai Periyar damமுல்லை பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் நாதன் தலைமையிலான மூவர் கண்காணிப்பு குழுவின் ஆய்வு கூட்டம் நாளை நடைபெறுகிறது.

இதுகுறித்த அதிகாரபூர்வ கடிதம் தமிழக, கேரள அரசு அதிகாரிகளுக்கு வந்துள்ளது. கடந்த நவம்பர் 24,ம் தேதிக்கு பின் கடந்த ஏழு மாதங்கள் கழித்து மூவர் குழுவின் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.

ஆய்வின் போது அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. மூவர் குழு கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் பழனியப்பன் பங்கேற்பார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top