சிறிசேனாவை மீறி ராஜபக்சேவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க சுதந்திரக் கட்சி முடிவு!

ராஜபக்சேமுன்னாள் அதிபர் ராஜபக்சேவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்துவது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 6 பேர் கொண்ட குழு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன எப்படியான நிலைப்பாடுகளை கொண்டிருந்தாலும் பரவாயில்லை எனவும் இந்த குழு குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 6 பேர் கொண்ட இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள் ஜோன் செனவிரட்ன, குமார வெல்கம, சுசில் பிரேமஜயந்த, டி.பி. ஏக்கநாயக்க, திலான் பெரேரா, அனுரபிரியதர்ஷன யாப்பா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜபக்சேவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடியாது என்றும், தேசிய பட்டியலிலும் அவருக்கு இடம் வழங்கப்பட மாட்டாது என்றும் அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே சுதந்திரக் கட்சியின் 6 பேர் கொண்ட குழு மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top