கோபா அமெரிக்க கால்பந்து: மெக்சிகோ அணி வெளியேற்றம்

a.espncdn44–வது கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி சிலியில் நடைபெற்று வருகிறது.

தென்அமெரிக்க கண்டத்தின் ஜாம்பவான் யார் என்பதை நிர்ணயம் செய்யும் இந்தப்போட்டியில் 12 நாடுகள் பங்கேற்றுள்ளன.

‘ஏ’ பிரிவில் கடைசி ‘லீக்’ ஆட்டங்கள் நேற்று நடந்தது. சான்டியாகோவில் நடந்த ஆட்டம் ஒன்றில் போட்டியை நடத்தும் சிலி–பொலிவியா அணிகள் மோதின.

சிலி வீரர்களின் அபாரமான ஆட்டத்துக்கு ஈடு கொடுத்து விளையாட முடியாமல் பொலிவியா திணறியது. அந்த அணி 5–0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. பொலிவியா அணியால் 1 கோல் கூட போட முடியாமல் போனது பரிதாபமே.

சிலி அணியில் சார்லஸ் அரன்குயஸ் 2 கோலும் (2–வது நிமிடம் மற்றும் 65–வது நிமிடம்), அலெக்சிஸ் சான்செஸ் (36–வது நிமிடம்), கேரி மெடல் (78–வது நிமிடம்) தலா 1 கோல் போட்டனர். பொலிவியா வீரர் ரொனால்டு ரால்டெஸ் கோல் (சேம்சைடு) அடித்தார்.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் மெக்சிகோ–ஈக்வடார் அணிகள் மோதின. இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் மெக்சிகோ அணி அதிர்ச்சிகரமாக தோற்று போட்டியில் இருந்து வெளியேறியது. ஈக்வடார் 2–1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தியது.

ஈக்வடார் அணியில் மில்லர் பொலோனஸ் (25–வது நிமிடம்), வாலென் சியா (57) ஆகியோர் கோல் அடித்தனர். மெக்சிகோ அணியில் ரவுல் ஜிம்மென்ஸ் பெனால்டி மூலம் 63–வது நிமிடத்தில் கோல் அடித்தனர்.

‘ஏ’ பிரிவில் சிலி 2 வெற்றி, 1 டிராவுடன் 7 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், பொலிவியா 1 வெற்றி, 1 டிரா, 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 2–வது இடத்தையும் பிடித்தன. முதல் 2 இடங்களை பிடித்த சிலி, பொலிவியா அணிகள் 2–வது சுற்றுக்கு தகுதி பெற்றன.

ஈக்வடார் 1 வெற்றி, 2 தோல்வியுடன் 3 புள்ளிகள் பெற்று 3–வது இடத்தில் உள்ளது. மற்ற பிரிவுகளில் 3–வது இடம் பெறும் அணியின் நிலை பொறுத்து 2–வது சுற்று வாய்ப்பு உள்ளது. மெக்சிகோ 2 டிரா, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் 4–வது இடத்தை பிடித்து போட்டியில் இருந்து வெளியேறியது.

இன்று ‘பி’ பிரிவில் கடைசி ‘லீக்’ ஆட்டம் நடக்கிறது. உருகுவே – பராகுவே, அர்ஜென்டினா– ஜமைக்கா அணிகள் மோதுகின்றன.

பராகுவே 1 வெற்றி, 1 டிராவுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. உருகுவே 1 வெற்றி, 1 தோல்வியுடன் 3 புள்ளி பெற்று இருக்கிறது. அர்ஜென்டினா 1 வெற்றி, 1 டிராவுடன் 4 புள்ளி பெற்று இருக்கிறது. ஜமைக்கா தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோற்று புள்ளி எதையும் பெறவில்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top