ஆர்.கே. நகர் தொகுதி: டிராபிக் ராமசாமியின் மனு தள்ளுபடி!

08-1433756856-traffic-ramasamy66ஆர்.கே.நகர் தொகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தக்கோரி டிராஃபிக் ராமசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலரும், ஆர்.கே.நகர் தொகுதி சுயேட்சை வேட்பாளருமான டிராஃபிக் ராமசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ”ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பிற்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் கமிஷன் சார்பில், “ஆர்.கே.நகர் தொகுதியில் பதட்டமான 29 இடங்களில் 104 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், துணை ராணுவ பாதுகாப்பும், 230 இடங்களில் நுண் பார்வையாளர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்” என விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி, தேர்தல் பாதுகாப்பு பணிகள் தொடங்கி விட்டதால், இதில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி, டிராஃபிக் ராமசாமியின் மனுவை தள்ளுபடி செய்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top