சென்னையில் கல்லூரி மாணவர்களால் போக்குவரத்து பாதிப்பு: ஓடும் பேருந்தின் மீது ஏறி நின்று ஆட்டம்!

26THTRAFFICJAM_1440425fசென்னையில் இரு வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் மாநகர பேருந்து மீது ஏறி நின்று நடனமாடி இடையூறு ஏற்படுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னையில் அரசு கலைக் கல்லூரிகள் திறக்கப்பட்ட முதல் நாளான நேற்றைய தினம், மாணவர்கள் உற்சாக மிகுதியில் இவ்வாறு நடந்து கொண்டனர். அரும்பாக்கத்திலுருந்து பாரிமுனை செல்லும் பேருந்து கீழ்ப்பாக்கம் வழியாக வந்தபோது அந்தப்பகுதியில் இருந்த கல்லூரி மாணவர்கள் பேருந்தின் மீது ஏறி நின்று ஆடினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஓட்டுனர் ரிப்பன் மாளிகை வந்தவுடன் பேருந்தை நிறுத்திவிட்டார். இதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தகவலறிந்து அங்கு வந்த போலீசார் மாணவர்களை கலைந்து போக அறிவுறுத்தியும் கேட்காமல் சாலையில் கும்பலாக நடந்து சென்றதால் போக்குவரத்து மேலும் பாதிக்கப்பட்டது.

இதேபோல், அம்பத்தூரிலும் கல்லூரி மாணவர்கள் மாநகர பேருந்தில் ஏறி ஆடிப்பாடி கூச்சலிட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top