4 வாரங்களுக்குள் மருத்தவ நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்துவது சாத்தியமில்லை: சிபிஎஸ்இ

supreme courtஅகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை 4 வாரத்திற்குள் நடத்துவது சாத்தியமில்லை என சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மறு தேர்வு நடத்த கால அவகாசம் கோரி சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. 4 வாரங்களில் மறு தேர்வு நடத்துவது சாத்தியமில்லை எனவும் 3 மாதங்களாவது கால அவகாசம் தேவை எனவும் சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது. மனுவை ஆராய்ந்த நீதிபதி ஆர்.கே.அகர்வால் தலைமையிலான அமர்வு மனுவை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் சிபிஎஸ்இ சார்பில் நாடு முழுவதும் அகில இந்திய முதல்நிலை மருத்துவ நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் தேர்வை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் 4 வாரங்களுக்குள் மறு தேர்வு நடத்த வேண்டும் எனவும் சிபிஎஸிக்கு உத்தரவிட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top