வேலூர் சிறையில் மௌன விரதம் கடைபிடிக்கும் முருகன்!

netaராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 17 ஆண்டுகளாக சிறைக்குப் பின் தனது வாழ்க்கையைக் கழித்து வரும் 47 வயதான ஸ்ரீஹரன் என்கிற முருகன், ஜூன் 1ம் தேதி முதல் மௌன விரதம் கடைபிடித்து வருகிறார்.

இது குறித்து அவரது வழக்குரைஞர் புகழேந்தி கூறுகையில், முருகன் 48 நாட்கள் தொடர்ந்து மௌன விரதம் கடைபிடித்து வருகிறார். அவர் தீவிர முருகன் பக்தர். சிறைக்குள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள எழுதிக் காட்டுகிறார். மௌன விரதத்தின் மூலம் அவர் தனது ஆழ்மன அமைதியை தேடுகிறார் என்று தெரிவித்துள்ளார்.

இந்த மௌனவிரதத்தை முருகன், மகளிர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தனது மனைவி நளினியை சந்தித்த போதும் கலைக்கவில்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top