தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நாளை துவக்கம்!

medical-final1382088743தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான முதல்கட்ட கலந்தாய்வு நாளை முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை ஓமந்தூராரர் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்ட அரங்கில் இந்த கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட அரங்கில் மாணவர்கள் வசதிக்காக 12 எல்.இ.டி. திரைகள், 5 கணினிகள், நிழற்கூடம், உணவு விடுதி உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சென்ற ஆண்டுவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வந்த மருத்துவக் கலந்தாய்வு, மெட்ரோ ரயில் பணிகளை கருத்தில் கொண்டு ஓமந்தூராரர் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்ட அரங்கில் நடத்தப்படுவதாகவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top