வாட்ஸ்அப்பில் ப்ளஸ் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: ஆசிரியர் ஒருவர் கைது!

Whatsapp3கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வாட்ஸ்அப்பில் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புக்கசாகரம் அரசுப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மாது என்பவரை வினாத்தாள் வெளியான வழக்கில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் ஒசூர் நடுவர் மன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கணித வினாத்தாள் வெளியான சம்பவத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் கவிதா, மகேந்திரன், கோவிந்தன், உதயகுமார் மற்றும் கார்த்திகேயன் உட்பட 8 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

அவர்கள் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக ஓசூர் மாவட்ட கல்வி அதிகாரியாக இருந்த வேதக்கண் தன்ராஜ் உள்பட 5 பேர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top