இலங்கை மனித உரிமைகள் மீறல் பற்றிய அறிக்கை ஆகஸ்ட்டில் வெளியாகும்: அமெரிக்கா நம்பிக்கை!

INDIA_-_SRI_LANKA_(F)_0508__-_Sri_Lankan_Tamil.இலங்கை போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐநா சபையின் அறிக்கை வரும் ஆகஸ்டில் வெளியாகும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் 29 வது கூட்டத்தில் அமெரிக்கா சார்பில் பங்கேற்றுப் பேசிய எரிக் ரிச்சர்ட்சன் கூறினார். அதேவேளையில், இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களுக்கு சர்வதேச நாடுகள் பொறுப்பேற்க வேண்டும் என்று ஐநா மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

போர்க்குற்றம தொடர்பான விசாரணையில் இலங்கை புதிய அரசு, நம்பிக்கையை நிலைநாட்டும் வகையில் செயல்பட வேண்டும் என மனித உரிமை ஆணையம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

விசாரணையில்,பன்னாட்டு நீதிபதிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தி உள்ளது. மேலும் இறுதிப்போரின் போது காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணை மற்றும் சாதாரண சமூகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் ஐநா மனித உரிமை ஆணையம் இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளது.

பன்னாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்த வலியுறுத்தல் ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் 29 வது கூட்டத்தில் அமெரிக்கா சார்பில் பங்கேற்றுப் பேசிய அமெரிக்கா இந்த அறிவிபவெளியிட்டுள்ளது.

ஐ.நாவின் இலங்கை தொடர்பான அறிக்கை இரு மாதங்களில் வெளியிடப்படும் என அமெரிக்க அரசின் சார்பில் எரிக் ரிச்சட்சன் தெரிவித்துள்ளார்.இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு சர்வதேச நாடுகளும் பொறுப்புக்கூற வேண்டும் என ஐ.நா கூட்டத்தொடரில் மனித உரிமை அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

போர்க்குற்ற விசாரணை தொடர்பில் இலங்கையின் புதிய அரசு, நம்பிக்கையை நிலைநாட்டும் வகையில் செயல்பட வேண்டும் என மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.

இலங்கை போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் என மனித உரிமை அமைப்பு ஐ.நாவில் வலியுறுத்தி உள்ளது.

மேலும் காணாமல் போனோர் மற்றும் சிவில் சமூகத்தின் மீது நடத்தப்படும் நியாயமற்ற வன்முறைச் சம்பவங்கள் என்பன முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என மனித உரிமை அமைப்பு இலங்கை அரசை கோரியுள்ளது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top