பஞ்சாப்பில் அமோனியா வாயு கசிவு;6 பேர் பலி,100 பேர் காயம்

201506130827060340_Ammonia-gas-tanker-leak-in-Ludhiana-leaves-6-dead-over-100_SECVPFபஞ்சாப் மாநிலத்தில் உள்ள லுதியானா நகரின் புறநகர் பகுதியில் இன்று அதிகாலை, அமோனியா வாயு நிரப்பிய டேங்கர் லாரி ஒன்று, டோரா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. குஜராத் பதிவெண் கொண்ட அந்த டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் நிரப்ப பட்டிருந்த அமோனியா வாயு கசிய தொடங்கியது. இந்த சம்பவத்தில் 6 பேர் பலியாயினர். மேலும் 100க்கும் மேற்பட்ட மக்கள் மூச்சு விட முடியாமல் சிரமத்திற்குள்ளாயினர்.

இதையடுத்து பாதிப்புக்குள்ளான மக்கள் டோரா, கன்னா  மற்றும் லுதியானா ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். வாயுக்கசிவு ஏற்பட்டதாக தகவல் வெளியானதும் பீதி அடைந்த மக்கள் வீட்டு வெளியேறினர். அங்குள்ள குடியிருப்பு வாசிகளுக்கு தேவையான முதலுதவிகளை தேசிய பேரிடம் மேலாண்மை மீட்பு படையினர் செய்தனர். இந்த விஷ வாயுவின் கசிவால்,பெரும்பாலான விலங்குகளும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இறந்தவர்கள் இன்னும் அடையாளம் கண்டறியப்படவில்லை. அங்குள்ள நிலமை குறித்து தெரிந்துகொள்ள மூத்த போலீஸ் அதிகாரிகளும் சிவில் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top