பீகார் மாநிலத்தில் காங்கிரசுக்கு 12 தொகுதிகள்: லல்லு பிரசாத் அறிவிப்பு

Lalu Prasad Yadavவரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 12 தொகுதிகள் ஒதுக்கி ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் அறிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. பாராளுமன்ற தேர்தலில் அந்த மாநிலத்தில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் சேர்ந்து போட்டியிடுகிறது. பாரதிய ஜனதா கட்சி ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

லல்லுபிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்துள்ளது. மற்ற 2 கூட்டணிகளில் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்தவிட்ட நிலையில் காங்கிரசுக்கும் லல்லு பிரசாத் யாதவுக்கும் தொகுதி பிரிப்பில் மோதல் ஏற்பட்டது.

காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என்று லல்லு கூறி வந்தார். அதை ஏற்க மறுத்த காங்கிரஸ் 12 தொகுதிகளை கேட்டது. அதுவும் மதுபனி மற்றும் மோதிஹரி ஆகிய 2 தொகுதிகளை விடாப் பிடியாக கேட்டது.

மதுபனி தொகுதியை தர முடியாது என்று திட்டவட்டமாக கூறிய லல்லு பிரசாத் நேற்றிரவு காங்கிரஸ் கூட்டணி உடன்பாட்டை உறுதி செய்தார். காங்கிரஸ் கட்சிக்கு 12 தொகுதிகளை விட்டு கொடுத்து இருப்பதாக அவர் அறிவித்துள்ளார். ஆனால் அவை எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top