அஞ்சலகங்களில் நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் உயர்வு!

India Postஇந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தினை 0.2 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அஞ்சலகங்களில் உள்ள சேமிப்புத் தொகைகளுக்கான வட்டி விகிதம் குறித்து பரிசீலிக்க அமைக்கப்பட்ட ஷியாமளா கோபிநாத் தலைமையிலான குழுவினர் மத்திய அரசுக்கு தங்களது பரிந்துரையை அளித்தனர்.

அதன் அடிப்படையில், நிதி அமைச்சகம், அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கான புதிய வட்டி விகிதங்களை அறிவித்துள்ளது. அதில், நிரந்தர வைப்புத் தொகைகளுக்கான வட்டி 0.2 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒன்று மற்றும் 2 ஆண்டுகளுக்கான நிரந்தர வைப்புத் தொகைக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த வட்டி 8.2ல் இருந்து 8.4 சதவீதமாக உயருகிறது.

3 மற்றும் 5 ஆண்டுகளுக்கான நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் 8.4 சதவீதத்தில் இருந்து 0.1 சதவீதம் அதிகரித்து 8.5 ஆகவும், 5 ஆண்டு ரெக்கரிங் டெபாசிட்டுகளுக்கு 8.3 சதவீதத்தில் இருந்து 8.4 சதவீதமாகவும் வட்டிவிகிதம் அதிகரித்துள்ளது.

பி.பி.எஃப்.பில் மாற்றம் இல்லை. பி.பிஎஃப் டெபாசிட் உச்சவரம்பு ஒரு லட்சம் மற்றும் வட்டி விகிதம் 8.7 சதவீதமாகவே நீடிக்கிறது. அதுபோல், தேசிய சேமிப்பு திட்டம் (என்எஸ்சி) மற்றும் மாதாந்திர வருவாய் திட்ட வட்டி விகிதங்களிலும் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. சிறுசேமிப்பு திட்டங்களுக்கான புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top