20 தமிழர்கள் படுகொலை: விசாரணைக்குழு அறிக்கை தாக்கல்

andhra-encounterதிருப்பதி அருகே 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கை ஆந்திர உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணக் குழு வனப்பகுதியில் ஆய்வு செய்ததோடு வேலூர் , சேலம் மற்றும் ஜவ்வாது மலை பகுதி கிராமங்களில் நேரில் விசாரணை மேற்கொண்டது.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்ட இந்த குழுவினர் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையில் 20 தமிழர்களின் உடற்கூறு பரிசோதனை அறிக்கை சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top