ஊடகங்களின் சுதந்திரத்தை காயப்படுத்த கூடாது: பெண் மாஜிஸ்திரேட்டுக்கு கேரள ஐகோர்ட் கண்டனம்

]p[]op]p[]opகேரள முதல் மந்திரி உம்மன் சாண்டியிடம் துப்பாக்கி ஏந்திய மெய்க்காப்பாளராக பணியாற்றிவந்த சலிம் ராஜ் என்பவர், சில அரசு அதிகாரிகளின் துணையுடன் திருவனந்தபுரம் மற்றும் கொச்சி மாவட்டத்தில் முறைகேடாக சுமார் 425 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. தவறு நடந்துள்ளதை கண்டுபிடித்த சி.பி.ஐ. அதிகாரிகள், சலிம் ராஜ் உள்ளிட்ட 9 பேரை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, சிறையில் அடைத்தனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு கடந்த 3-ம்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பான செய்தியை சேகரிப்பதற்காக விசாரணை அறையில் அமர்ந்திருந்த நிருபர்களை வெளியே போகுமாறு இந்த ஜாமின் மனுவை விசாரித்த பெண் தலைமை மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நில அபகரிப்பு வழக்கு தொடர்பான மூல வழக்கின் விசாரணை இன்று கேரள மாநில ஐகோர்ட்டில் நடைபெற்றது. அப்போது, நிருபர்களை கோர்ட் அறையில் இருந்து வெளியேற்றிய பெண் மாஜிஸ்திரேட்டின் நடவடிக்கை தொடர்பான தகவலை எர்ணாகுளம் மாவட்டத்துக்கு உட்பட்ட வழக்குகளை விசாரிக்கும் ஐகோர்ட் நீதிபதியின் கவனத்துக்கு மூத்த பத்திரிகை நிருபர்கள் கொண்டு சென்றனர்.

இதையறிந்த நீதிபதி கே.டி.சங்கரன் அந்தப் பெண் மாஜிஸ்திரேட்டின் நடவடிக்கைக்கு கண்டனமும், அதிருப்தியும் தெரிவித்தார்.

திறந்த நீதிமன்ற அறைகளில் நடைபெறும் விசாரணை தொடர்பான செய்திகளை சேகரிக்க ஊடக நிருபர்களுக்கு சுதந்திரம் உண்டு. அந்த சுதந்திரத்தை காயப்படுத்த கூடாது என குறிப்பிட்ட நீதிபதி கே.டி.சங்கரன், தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும், இது தொடர்பான தனது அதிருப்தியை அந்த பெண் மாஜிஸ்திரேட்டுக்கு தெரிவிக்கும்படியும் ஐகோர்ட் பதிவாளருக்கு உத்தரவிட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top