விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி பங்களாதேஷ்‌ சென்றது

virat_kholiவிராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி பங்களாதேஷ்‌ சென்றது.விராட் கோலி, புஜாரா இசாந்த் ஷர்மா, ரஹானே, அஷ்வின், முரளி விஜய் உள்ளிட்ட வீரர்கள் கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் இன்று காலையில் பங்களாதேஷ் புறப்பட்டுச் சென்றனர்.

டாக்காவில் இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெஸ்ட் போட்டிகளில் வெற்றிக் கணக்கை தொடங்குவதற்கு இதுவே சரியான நேரம் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ்-க்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி, பதுல்லாவில் நாளை மறுதினம் தொடங்குகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top