உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவிற்கு எதிரான நிலை தொடரும்: ஒபாமா

barack-obamaஉக்ரைன் விவகாரத்தில்,ரஷ்யாவிற்கு எதிரான நிலையை ஜி7 நாடுகள் எடுத்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஜி7 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்துப் பேசினார். பின்னர் பேசிய ஒபாமா, அமெரிக்கா, ஜெர்மனி ஆகியவற்றின் கூட்டணி உலகில் மிக வலிமையானது என குறிப்பிட்டார். இதேபோல் ஜெர்மனியின் முக்கியக் கூட்டாளி அமெரிக்கா என அதிபர் ஏன்ஜெலா மெர்கல் தெரிவித்தார்.

ஜெர்மனி அதிபரின் தொலைபேசியை அமெரிக்க உளவுத் துறையினர் வேவு பார்த்ததாகத் தகவல் வெளியானதை அடுத்து இரு நாட்டு உறவில் கசப்புணர்வு ஏற்பட்டது. இந்நிலையில் இருநாட்டு அதிபர்களும் ஒருவரை ஒருவர் பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், கிரீஸ் கடன் விவகாரம், தீவிரவாதம் போன்றவை குறித்தும் ஜி7 நாடுகளின் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

இதனிடையே ஜி7 மாநாடு நடைபெறும் இடத்தை முற்றுகையிட முயன்ற மாநாட்டு எதிர்ப்பாளர்களைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top