டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் கேரள மாநில ஆளுநராக நியமனம்!

ஷீலா தீட்சித்டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் கேரள மாநில புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

கேரள மாநில ஆளுநராக உள்ள நிகில் குமார் ராஜினாமா கடிதம் உடனடியாக ஏற்கப்பட்டுள்ள நிலையில், ஷீலா தீட்சித் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஷீலா தீட்சித் ஆளுநராக பொறுப்பேற்கும் வரை கர்நாடக ஆளுநர் எச்.ஆர். பரத்வாஜ், கேரள ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் எனவும் குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்ய் தவிர பி.எல்.ஜோஷி, உத்தரப்பிரதேச மாநில ஆளுநராக 2-வது முறை பதவி வகிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top