காஷ்மீரில் மூன்று நாளாக சீக்கியர்கள் போராட்டம்: போலீசார் துப்பாக்கி சூட்டில் வாலிபர் ஒருவர் பலி!

Sikhs protest in Kashmirகாஷ்மீர் மாநிலம் ஜம்முவில், மறைந்த சீக்கிய தலைவர் பிந்தரன்வாலேயின் சுவரொட்டியை போலீசார் கிழித்ததை கண்டித்து அங்குள்ள சீக்கியர்கள் போராட்டத்தில் குதித்தனர். போலீசார் மீது கற்களை வீசினர். சாலைகளை மறித்தனர்.

அவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஜகஜித்சிங் என்ற சீக்கிய வாலிபர் பலியானார். போராட்டக்காரர்களின் தாக்குதலில் போலீசார் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர். ஒரு சப்-இன்ஸ்பெக்டர் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டார்.

இந்நிலையில், ஜம்முவில் மேலும் ஒரு போலீஸ்காரர் கத்தியால் குத்தப்பட்டார். அவர் பெயர் ஜோகிந்தர் பால். டி.எஸ்.பி.யின் மெய்க்காப்பு அதிகாரியாக உள்ளார். அவரை குத்தி விட்டு, அவரது ஏ.கே.ரக துப்பாக்கியையும் மர்ம கும்பல் பறித்துச் சென்று விட்டது. துப்பாக்கியை மீட்ட போலீசார், இதுபற்றி வழக்கு பதிவு செய்துள்ளனர். கைது நடவடிக்கை பாயும் என்று அவர்கள் கூறினர்.

144 தடை உத்தரவை மீறி, ஜம்மு, பூஞ்ச், ரஜவுரி, கதுவா உள்பட பல மாவட்டங்களில் நேற்று 3-வது நாளாக சீக்கியர்கள் போராட்டம் நடத்தினர். இதனால், ஜம்மு பிராந்தியம் பதற்றமாக காணப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top