சீனாவில் கப்பல் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 335 ஆக உயர்வு

An injured sailor of the ship which sank at the Jianli section of the Yangtze River is rushed to receive treatment upon arrival at a hospital in Jingzhouசீனாவில் ஹூபெய் மாகாணத்தில் கடந்த 1-ந்தேதி பயங்கர சூறாவளி காற்று வீசியது. அந்த சூறாவளியில் ஆசியாவின் மிகப்பெரிய யாங்ட்ஸே ஆற்றில் 456 பேருடன் நான்ஜிங் நகரில் இருந்து சோங்கிங் நகர் நோக்கி சென்ற பயணிகள் கப்பல் கவிழ்ந்தது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சீன பிரதமர் லீ கெகியாங், கடந்த 2-ந்தேதியன்று சம்பவ இடத்துக்கு விரைந்தார். மீட்பு பணிகளை அவர் நேரில் பார்வையிட்டு, ஆலோசனைகள் வழங்கினார்.

அதன் பின்னர் 14 பேர் மீட்கப்பட்டனர். நேற்று வரை 97 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. எஞ்சியுள்ளவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கப்பல் கடலில் மூழ்கி 6 நாட்கள் ஆகிவிட்டதால் இனிமேல் யாரும் பிழைக்க வாய்ப்பில்லை என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் இந்த சாவு எண்ணிக்கை 335 ஆக உயர்ந்துள்ளது. நீரில் மூழ்கிய மற்றவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

சீனாவில் கடந்த 70 ஆண்டுகளில் நடைபெற்ற விபத்தில் இதுதான் மோசமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top