தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 24-ல் பாராளுமன்ற தேர்தல் – இந்திய தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் அறிவிப்பு.

vs-sampath-350_070912110142தற்போதைய 15-வது பாராளுமன்றத்தின் பதவிக்காலம் வருகிற ஜூன் 1-ந்தேதியுடன் முடிவடைகிறது. எனவே மே 31-ந்தேதிக்குள் புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட வேண்டும். இதனால் பாராளுமன்ற தேர்தலை நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் கமிஷன் மும்முரமாக உள்ளது. தேர்தல் பணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊழியர்களை அழைத்துச்செல்வது போன்ற பிரச்சினைகளை கருத்தில் கொண்டு எத்தனை கட்டங்களாக ஓட்டுப்பதிவை நடத்துவது என்பது பற்றி தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக ஆலோசித்து வந்தனர்.

இதுதொடர்பான பணிகள் முடிவடைந்து விட்டதால், பாராளுமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது.

டெல்லி விஞ்ஞான பவனில் இன்று நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பில் பாராளுமன்ற தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் அறித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

16-வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 7-ந்தேதி தொடங்குகிறது. 9 கட்டமாக தேர்தல் நடைபெறும். கடைசி கட்ட தேர்தல் மே-12-ந்தேதி நடக்கிறது.

தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 24-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.

மே 16-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

One comment

  1. L’artticle m’a beaucoup plu car j’ai un nom de domaine lesninsdulavguedoc que j’ai pris un peu comme ça. Au départ ca ma aidé mais il est devenu un peu générique et comme le remarque l’article ca peu coincé pour se developpé. De plus, j’avais remarqué une chute vers mai et juin.

Your email address will not be published.

Scroll To Top