மோடி இந்தியாவின் பிரதமர் ஆவதை தடுக்க பகுஜன் சமாஜ் கட்சி போராடும் : மாயாவதி

Mayawatiமோடி ஒரு பொய்யர் என்றும், இதுபோன்ற ஒரு மனிதர், இந்தியாவின் உயர் பதவியில் அமருவதை தடுக்க பகுஜன் சமாஜ் கட்சி போராடும் என அக்கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எளிய மக்களை ஏமாற்றும் வகையில் நரேந்திர மோடி பொய்யான தகவல்களைக் கூறி பிரசாரம் செய்து வருகிறார்.

பிற்படுத்தப்பட்டவர் எனத் தம்மைக் கூறிக் கொள்ளும் மோடி, தாம் எந்த வகுப்பைச் சேர்ந்தவர் என இதுவரை வெளிப்படையாகத் தெரிவித்ததில்லை.

மோடி ஒரு பொய்யர் என்பதற்கு இதுவே உதாரணம். அவர் பேசுவதில் உண்மையில்லை. இதுபோன்ற ஒரு மனிதர், இந்தியாவின் உயர் பதவியில் அமருவதை தடுக்க பகுஜன் சமாஜ்வாதி கட்சி போராடும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி அபார வெற்றி பெறும்” என்று கூறினார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top