ஜூன் 2–ந்தேதி தெலுங்கானா மாநிலம் உதயம்: மத்திய அரசு அறிவிப்பு

central governmentஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதிகள் பிரிக்கப்பட்டு தனி மாநிலம் உருவாக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் கடந்த மாதம் இதற்காக மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து அந்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த வாரம் பிரணாப்முகர்ஜி தெலுங்கானாவுக்கு ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டார்.

இதன் மூலம் இந்தியாவின் 29–வது புதிய மாநிலமாக தெலுங்கானா அமைவது உறுதி ஆனது. அதன் தொடர்ச்சியாக புதிய மாநிலத்துக்கான நிர்வாக பணிகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் வரும் ஜுன் மாதம் 2–ந்தேதி முதல் தெலுங்கானா மாநிலம் உதயமாகி செயல்பட தொடங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது. பாராளுமன்ற தேர்தல் தேதி அட்டவணை இன்று அறிவிக்கப்படுவதால் தெலுங்கானா உதயமாவது ஒரு நாளுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜுன் 2–ந்தேதி முதல் தெலுங்கானா மாநிலம் தனி மாநிலமாக செயல்பட தொடங்கிவிடும். மாநில நிர்வாகத்தை நடத்த உள்ள தலைமை செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.

தெலுங்கானாவின் தலைநகரமாக ஐதராபாத் இருக்கும். சீமாந்திராவுக்கும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஐதராபாத் தலைநகரமாக இருக்கும்.

இதற்கிடையே சீமாந்திராவுக்கு புதிய தலைநகரை தேர்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்னும் 3 மாதங்களில் புதிய தலைநகரை தேர்வு செய்து பரிந்துரை செய்வார்கள்.

அதன் பிறகு சீமாந்திராவின் புதிய தலைநகர் எது என்பது தெரிய வரும். சீமாந்திராவுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top