பாராளுமன்ற தேர்தல் தேதிகள் நாளை அறிவிப்பு!

parliamentary election dateமக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் நாளை வெளியிடப்படும் எனத தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

15வது மக்களவை முடிவடைவதையொட்டி மக்களவைக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இந்தியா முழுவதும் 6 அல்லது 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இந்த தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவரும் அதேவேளையில் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. மேலும் கூட்டணிகளை உருவாக்குதல் மற்றும் தொகுதி உடன்பாடு என அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவிவருகிறது.

இந்நிலையில் நாளை மக்களவை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பினை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. காலை 10.30 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top